செய்திகள் :

`இவனைக் கொன்னுடலாம்னு தோணுது’- குடித்துவிட்டுத் துன்புறுத்தல்; தோசை மாவில் விஷம்– தாய், காதலி கைது

post image
விழுப்புரம் குமளம் ஊராட்சி சீனுவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் விஸ்வலிங்கம். கார் ஓட்டுநரான விஸ்வலிங்கம், சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூருக்கு சவாரி சென்றார். அப்போது மேலத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
கொலை செய்யப்பட்ட விஸ்வலிங்கம்

அதையடுத்து செல்வியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த விஸ்வலிங்கம், திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார் விஸ்வலிங்கம். அதைப் பார்த்த அவரது தாய் முனியம்மாள், கதறி அழுதார்.

கைது செய்யப்பட்ட செல்வி

அவரது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வளவனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், விஸ்வலிங்கத்தின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஸ்வலிங்கத்தின் உடலில் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகள் கத்தியால் குத்தப்பட்டும், கிழிக்கப்பட்டும் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டதை போலீஸார் உறுதி செய்தனர். தொடர்ந்து தாய் முனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த ஊர் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போதுதான் செல்வியுடன் விஸ்வலிங்கம் குடும்பம் நடத்திய விவகாரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது. அதேசமயம் செல்வி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து செல்வியின் சொந்த ஊரான மேலத்தாழனூர் கிராமத்திற்குச் சென்ற போலீஸார், அங்கு வயல்வெளிப் பகுதியில் பதுங்கியிருந்த செல்வியை சுற்றி வளைத்தனர். அதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாளுடன் இணைந்து, விஸ்வலிங்கத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார் செல்வி.

கைது செய்யப்பட்ட விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``விஸ்வலிங்கமும், செல்வியும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். விஸ்வலிங்கத்துக்கு மதுப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்துவிட்டு, தாய் முனியம்மாளிடமும், செல்வியிடமும் வாக்குவாதம் செய்து அடிப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதனால் நொந்துபோன செல்வி, `இவனைக் கொலை செய்துவிடலாம் போல இருக்கிறது’ என்று முனியம்மாளிடம் கூறியிருக்கிறார். மகனின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்து வந்த முனியம்மாளும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வந்த விஸ்வலிங்கம், இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கியிருக்கிறார்.

அதே வேகத்தில் சாப்பிடுவதற்கு தோசை கேட்டிருக்கிறார். அதில் இன்னும் கடுப்பான இருவரும், தோசை மாவில் பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை கலந்திருக்கின்றனர். அதையடுத்து அந்த மாவில் தோசை ஊற்றி, விஸ்வலிங்கத்துக்கு கொடுத்திருக்கின்றனர். மது போதையில் இருந்ததால், பூச்சி மருந்தின் வாடை அவருக்குத் தெரியவில்லை. அன்று வழக்கமாக சாப்பிடுவதைவிட கூடுதலான தோசையை சாப்பிட்டதாகச் கூறியிருக்கிறார் செல்வி. சாப்பிட்ட சிறிது நேரத்தில் சரிந்து விழுந்த விஸ்வலிங்கம், வாயில் நுரை தள்ளி துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். அதையடுத்து அந்த கொலையை எப்படி மறைப்பது என்று செல்வியும், முனியம்மாளும் திட்டமிட்டிருக்கின்றனர்.

கொலை

சம்பவத்திற்கு முதல் நாள் இரவு, அதே ஊரைச் சேர்ந்த விஸ்வலிங்கத்தின் உறவினர்கள் சிலர் அவருடைய வீட்டுக்கு வந்து வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அதனால் விஸ்வலிங்கத்தின் உடலை கத்தியால் குத்தி போட்டுவிட்டால், அவர்கள் மீது பழி விழுந்துவிடும், நாம் தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி கத்தியால் விஸ்வலிங்கத்தின் கழுத்து, மார்பு, வயிறு, தோள்பட்டை போன்ற இடங்களில் குத்தியும், கிழித்தும் போட்டு நாடகமாடினர். ஆனால் செல்வி அங்கிருந்து மாயமானதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதேபோல வீட்டில் கிடைத்த சில தடயங்களும், கொலையாளிகளை அடையாளம் காண உதவியது” என்றனர்.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு; கல்குவாரிகளில் 2வது நாளாகத் தொடரும் அளவிடும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதம... மேலும் பார்க்க

கரூர்: முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்; கொல்ல திட்டம் போட்ட இளைஞர்; முறியடித்த போலீஸ்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 24) என்பவரும் சமூக வலைத்தளமான முகநூல் மூல... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆடையில்லாமல் வீடியோ காலில் வா’ - இன்ஸ்டாகிராம் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, ஸ்டேடஸ் வைப்பது போன்றவற்றில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த முஜீப் அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

10 வருட தலைமறைவு வாழ்க்கை; செல்ஃபியால் சிக்கல் - என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்!

சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியா... மேலும் பார்க்க

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கிய எஸ்ஐ - பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உத்தரவு!

பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கி இருந்த விவகாரத்தில் எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது: 58). இவர், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் ... மேலும் பார்க்க