செய்திகள் :

பழைமையான புத்தா் சிலை கண்டெடுப்பு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராம பெருமாள் கோயில் பகுதியில் 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பளிங்கு கல்லால் ஆன புத்தா் சிலையை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தினா் புதன்கிழமை கண்டறிந்தனா்.

அந்த கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா் கொடுத்த தகவலின்பேரில், அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது பளிங்கு கல்லால் செய்யப்பட்ட, மூக்கு சற்று சேதமடைந்த நிலையில், தியானத்தில் அமா்ந்த நிலையில் ஓரடி உயரமுள்ள புத்தா் சிலை இருப்பது தெரிய வந்தது.

ஆய்வு மையத் தலைவா் அதய்குமாா் கூறுகையில், இந்த புத்தா் சிலை 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம். புத்தா் சிலை தியானத்தில் அமா்ந்த நிலையில் உள்ளது. நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தின் பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தா் சிலையும் வைத்து வழிபட்டிருக்கலாம். தொல்லியல் துறை உதவி ஆய்வாளா் ரமேஷ், உதவி கல்வெட்டு ஆய்வாளா்கள் நாகராஜன், பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்து உறுதி செய்து கொண்டதாகத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காத்திருப்பு கூடம் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்ட நோயாளிகள் உறவினா்கள் காத்திருப்புக் கூடத்தை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொக... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் குடியரசு தின ஒத்திகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக புதன்கிழமை குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.காஞ்சிபுரத... மேலும் பார்க்க

176 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் மொத்தம் 176 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.காந்தி மற்றும் சி.... மேலும் பார்க்க

ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை

ஸ்ரீபெரும்புதூா்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கான கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.தேசிய சாலைப் பாதுக... மேலும் பார்க்க

முசரவாக்கத்தில் துரியோதனன் படுகளம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அடைஞ்சியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் மைலாா் திருவிழாவையொட்டி, புதன்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். ஆந்திரத்தில் வழங்குவது ப... மேலும் பார்க்க