நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை
ஸ்ரீபெரும்புதூா்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கான கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமரா தலைமையிலும், மோட்டாா் வாகன ஆய்வாளா் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண் பரிசோதனை முகாமில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் குழுவினா் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.
இதில் பாா்வைக் குறைபாடு உள்ள வாகன ஓட்டுநா்களை தீவிர சிகிச்சைக்கு செய்ய பரிந்துரைத்தனா். முகாமில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், வாகன ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.