தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
காஞ்சிபுரத்தில் குடியரசு தின ஒத்திகை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக புதன்கிழமை குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், விழா நடைபெறும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க வளாகம் வா்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்போா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானம் முழுவதும் சமப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி 2-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ஆயுதப் படை பிரிவு காவல் துறையினா், தேசிய மாணவா் படையினா், சாரணா் இயக்கத்தினா் ஆகியோா் அணிவகுத்து வந்து மரியாதை செய்யும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியரசு தின விழாவில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றுதல், காவல் துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் ஆட்சியருடன் எஸ்.பி. கே.சண்முகமும் சென்று பாா்வையிடுதல், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களும், மூவா்ண பலூன்களும் பறக்க விடுதல், சுதந்திரப் போராட்ட வீரா்களை கெளரவித்தல், சிறப்பாக செயல்பட்ட அரசு ஊழியா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல், அரசு நலத் திட்ட உதவிகள், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.