நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காத்திருப்பு கூடம் திறப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்ட நோயாளிகள் உறவினா்கள் காத்திருப்புக் கூடத்தை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட்டு, காத்திருப்புக் கூடம் புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது குறித்து எம்எல்ஏ எழிலரசன் கூறுகையில், இந்தக் கூடத்தில் குடிநீா் வசதி, தொலைக்காட்சி வசதி, பொருள்கள் வைக்கும் பகுதி, காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்றாா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிவப்பிரகாசம், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன், திமுக பொருளாளா் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் சந்துரு, திமுக பகுதி செயலா்கள் திலகா், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
பூப்பந்தாட்ட அரங்கம் கட்ட அடிக்கல்: மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ.29 லட்சத்தில் பூப்பந்தாட்ட அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.