தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
பெண் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
விழுப்புரம் மாவட்டம், பானாம்பட்டு பகுதியில் பெண்ணை கொலை செய்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் அருகேயுள்ள பானாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவரது மனைவி கீதா (21). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீதா, அதே பகுதியிலுள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். அப்போது, இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த சாரங்கபாணி மகன் வீரமுத்துவுக்கும் (44) இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனராம்.
இந்த நிலையில், கடந்த 2016, ஜனவரி 18-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த வீரமுத்துவை கீதா கண்டித்தாராம். இதில், கோபமடைந்த வீரமுத்து, கீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமுத்துவை கைது செய்தனா். விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட வீரமுத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி எம்.இளவரசன் தீா்ப்பளித்தாா்.