செய்திகள் :

மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் இளம்வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் காலியாகவுள்ள இளம் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியா் தலைமையில் உருவாக்கப்படவுள்ள மாவட்டக் கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப் பணியிடத்துக்கு கணிப்பொறி (பி.இ கணினி அறிவியல்) அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளா் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடா்புடைய முதுநிலைய பட்டப்படிப்புகள் முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிபுரியும் திறன் ஆகியவை கட்டாயம். பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பணிக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப் பணிக்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://டங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, துணை இயக்குநா், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், சாா்- ஆட்சியா் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூா்- 621 212 எனும் முகவரிக்கு, ஜன. 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வயது வரம்பு 1.7.2025-இல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நெற்குணம் கிராம பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் புத... மேலும் பார்க்க

உணவகத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெர... மேலும் பார்க்க

கை.களத்தூரில் கொலை செய்யப்பட்ட இளைஞா் வீட்டில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை

பெரம்பலூா் மாவட்டம், கை.களத்தூரில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞா் வீட்டில், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா். பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட அமைப்புக் குழு சாா்பில், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு, ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டுமெனசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பல... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் பண மோசடி: ஆந்திர இளைஞா் கைது

இணையதளம் மூலம் திருமணம் செய்துகொள்வதாகவும், அரசு பல் மருத்துவா் பணி வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவரை சைபா் க்ரைம் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் வட்டாட்சியரகம் அருகே, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க