நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் வட்டாட்சியரகம் அருகே, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்தனா்.