செய்திகள் :

ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 31) புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிக்க: மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

இந்தப் போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையானது. பேட்டிங் செய்கையில், ஷிவம் துபேவுக்கு அவரது தலைக்கவசத்தில் பந்து பலமாக தாக்கியது. அதனால், அவருக்கு தலையில் வலி இருப்பதாகக் கூறி அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரரை இந்திய அணி களமிறக்கவில்லை என்பது பெரும் பேசுபொருளானது.

சுனில் கவாஸ்கர் கூறுவதென்ன?

ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையானதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக புணேவில் நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபேவின் தலைக்கவசத்தில் பந்து பலமாக தாக்கிய பிறகும் அவர் விளையாடினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படவில்லை. அதனால், அதன் பின் அவருக்குப் பதிலாக ஃபீல்டிங்கின்போது மாற்று வீரரை அனுமதித்ததே தவறு. பந்து தலைக்கவசத்தில் பலமாக பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட வீரர் ஃபீல்டிங் மட்டும் செய்திருக்க வேண்டும். பந்து வீசியிருக்கக் கூடாது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரர் களமிறக்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா ஷிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரர் கிடையாது. அதனால், இங்கிலாந்து அணி அதிருப்தி தெரிவித்துள்ளதை தவறென கூற முடியாது. இந்திய அணி மிகவும் சிறப்பான அணி. இந்திய அணிக்கு இதுபோன்ற செயல்களால் வரும் வெற்றி தேவையில்லை. இந்திய அணி சிறப்பான அணி என்பதை நிரூபிக்க மும்பையில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றார்.

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொட... மேலும் பார்க்க

யு19 மகளிர் உலகக்கோப்பை- இந்தியா சாம்பியன்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க