செய்திகள் :

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர். அப்போது, அந்த வழியாகத் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் கொடிகட்டி வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தண்ணீர் லாரி மீது மோதி நின்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள், மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற இளைஞர்கள் என அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.

விபத்து
விபத்து

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த காரில் இருந்தவர்களை வெளியே இறங்கச் சொல்லிக் கூச்சலிட்டனர். அப்போது, காரில் இருந்த மூன்று இளைஞர்கள் மது போதையிலிருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மூன்று பேரையும் காரில் இருந்து வெளியே தள்ளி சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த திருமயம் காவல் நிலைய போலீஸார், மது போதையிலிருந்த மூன்று பேரையும் பொதுமக்களிடமிருந்து மீட்டு, திருமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தது சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி மணி எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேர் மீதும் திருமயம் போலீஸார் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

விபத்து
விபத்து

போதை ஒழிப்பு மாரத்தான் போட்டிக்குள் மது போதையில் கார் ஓட்டி வந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஜகபர் அலி கொலை வழக்கு: உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுப்பு; போலீஸ் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வெங்கடேஷுக்கு ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு இரண்டாவது முறை... மேலும் பார்க்க

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அத... மேலும் பார்க்க

கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...

கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இர... மேலும் பார்க்க