செய்திகள் :

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

post image

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வறிக்கை, தெலங்கானாவின் மொத்த மக்கள்தொகையான 3.70 கோடியில் 3.5 கோடி (96.9%) தனிநபர்களை உள்ளடக்கியது. மீதமுள்ள 3.1 சதவீதத்தினரில் (16 லட்சம் பேர்) சிலர் ஆய்வறிக்கையில் ஆர்வம் காட்டாததாகவும் கூறினர். தெலங்கானாவில் 1,15,78,457 எண்ணிக்கையில் குடும்பங்கள் உள்ளநிலையில், 1,12,15,134 குடும்பங்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தெலங்கானா மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 17.43 சதவீதமாகவும், பழங்குடியினர் 10.45 சதவீதமாகவும், முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08 சதவீதமாகவும், இதர பிரிவினர் 13.31 சதவீதமாகவும், முஸ்லிம்களில் இதர பிரிவினர் 2.48 சதவீதம் என்ற நிலையிலும் உள்ளனர்.

இதையும் படிக்க:தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!

தெலங்கானாவில் 61,84,319 பட்டியலினத்தவர்களும், 37,05,929 பட்டியலின பழங்குடியினரும், முஸ்லிம் சிறுபான்மையைத் தவிர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 1,64,09,179 பேரும், முஸ்லிம் சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 35,76,588 பேரும், முஸ்லிம் இதர பிரிவில் 8,80,424 பேரும் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை குறித்து, தெலங்கானா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று கூறிய தெலங்கானா குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி, ``சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏழைகளுக்கும், பலவீனமான மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் துறைகளில் தரவுசார்ந்த நலன் மற்றும் தரவுசார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அரசியல் தலைவர்களும் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சியில் பட்டியலினத்தவர் கூக்குரல்களைக் கேட்க யாருமில்லை: பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண்ணின் படுகொலை சம்பவத்துக்கு காங்க... மேலும் பார்க்க

ஏஐ துறையில் தடம் பதிக்கும் இந்தியா?

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாட்டில் இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் ... மேலும் பார்க்க

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க