செய்திகள் :

Trump Vs Bishop : `இரக்கம் காட்டுங்கள்'- தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காகப் பேசிய மதகுரு; ட்ரம்ப் பதிலடி!

post image

ட்ரம்ப் பதவியேற்றதற்கான சிறப்பு வழிபாட்டை வாஷிங்டன் மறைமாவட்ட ஆயர் மரியன் எட்கர் புடே நடத்தினார்.

அவர் மீண்டும் அரியணை ஏறியிருக்கும் ட்ரம்ப், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் குடியேற்றியவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என பிரார்த்தனை மேடையிலேயே கேட்டுக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன் தேசிய பேராலயத்தில் நடந்த வழிபாட்டில், "உங்களிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் மிஸ்டர் ப்ரெசிடெண்ட், மில்லியன் கணக்கான மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சமீபமாக நாட்டுமக்களிடம் உரையாடிய நீங்கள், அன்பு நிறைந்த நம் கடவுளின் பாதுகாப்பு கரத்தை உணருவதாகத் தெரிவித்தீர்கள்.

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!

கடவுளின் பெயரால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டு மக்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். இங்கு கே (Gay), லெஸ்பியன் (Lesbian) மற்றும் திருநங்கை குழந்தைகள் இருக்கின்றனர். ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி மற்றும் சுதந்திரமான குடும்பங்களிலும் இருக்கும் அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சத்தில் உள்ளனர்.

குடியேறியவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல

நம் வயலில் பயிர்களை அறுப்பவர்கள், நம் அலுவலகங்களை சுத்தப்படுத்துபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள், இறைச்சி உற்பத்தியில் பணியாற்றுபவர்கள், நாம் உணவகங்களில் சாப்பிட்ட பிறகு தட்டு கழுவுபவர்கள், மருத்துவமனைகளில் இரவு வேலை செய்பவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். அவர்கள் அமெரிக்க குடிமக்களாக இல்லாமல் இருக்கலாம், உரிய ஆவணங்கள் வைத்திருக்காமல் இருக்கலாம்.

அமெரிக்காவில் குடியேறும் அகதிகள்

குடிபுகுந்தவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் வரி கட்டுகின்றனர், நம் அண்டை வீடுகளில் வசிக்கின்றனர், நம் தேவாலயங்களில், மசூதிகளில், யூத ஜெப ஆலயங்களில், வதாராக்களில் மற்றும் கோவில்கலில் நம்பிக்கை மிக்க உறுப்பினர்களாக உள்ளனர்.

நம் சமூகத்தில் பெற்றோர்கள் நாடுகடத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும்.

தங்கள் தாய்நாட்டில் போர்களாலும் வன்முறைகளாலும் துன்பப்பட்டு பரிவையும் அரவணைப்பையும் நாடி இங்கு வருபவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

நம் கடவுள் நாம் முன்பின் தெரியாதவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் எனக் கற்றுக்கொடுத்துள்ளார். நாம் எல்லாருமே ஒரு காலத்தில் இந்த மண்ணில் முன்பின் தெரியாதவர்களாக இருந்தவர்கள்தான்." என்றார்.

பேராயர் மரியான் எக்டர் புடே

Trump பதிலடி

வாஷிங்டன் மாவட்டத்தின் முதன் பெண் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டவரான எக்டர் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், "பிஷப் எனக் கூறப்படும் பேராலயத்தில் பிரசங்கம் நடத்திய பெண், தீவிர இடதுசாரி மற்றும் கடும்போக்கு ட்ரம்ப் வெறுப்பாளர்.

அவர் மோசமான முறையில் பேசினார், புத்திசாலித்தனமாக இல்லை... அவரும் அவரது தேவாலயமும் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் முதல்நாள் ஆணைகள்!

அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ஒரே நாளில் பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

Trump 2.0

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், வெளிநாடுகளுக்கான நிதி உதவியை நிறுத்திவைத்தல், காலநிலை மாற்றத்துக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்தல், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினருக்கான அங்கீகாரத்தை முடக்குதல், சரியான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகளை நாடுகடத்துதல் உட்பட பல திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

அவற்றைக் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும், Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்

Trump wall Explained: ``175 ஆண்டுகாலப் பிரச்னை" - ட்ரம்ப் சுவரின் வரலாறும்... பின்னணியும்!

அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் முதல் நாளிலேயே குடியேற்றம் முதல் காலநிலை மாற்றம் வரை ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதில் கூடுதல் கவனம் பெற்ற செய்திகளில் ஒன்று குடிய... மேலும் பார்க்க

Trump ஐடியை தானாகவே Follow செய்யும் Facebook, Insta; பயனர்கள் 'ஷாக்' - மார்க்கின் அதிகார சார்பா?

அமெரிக்காவில் குடியுரிமைக் கட்சி வெற்றி பெற்று அதிகார மாற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள் வித்தியாசமான ஒன்றை எதிர்கொண்டுள்ளனர். பலரும் தங்கள் கணக்கு தானாகவே அதிபர் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு; மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் அபராதம்

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் சென்டாக் (CENTAC - Centralised Admission Committee) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2017-18 ஆண்டு சென்டாக் மூலம... மேலும் பார்க்க