இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
உணவகத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது
பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே கல்பாடி பிரிவுச் சாலையிலுள்ள உணவகத்தில், மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை அண்மையில் பறித்துச் சென்றனா். இதுகுறித்து உணவக வரவேற்பாளா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ரமேஷ் (18), சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.