இபிஎஸ் சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு!
மனைவியைக் கொன்று, உடலை சமைத்த கணவர்!
ஹைதராபாத்தில் மனைவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அதை பிரஷெர் குக்கரில் வைத்து சமைத்ததை அவரது கணவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் குரு மூர்த்தி (வயது 45), முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி வெங்கட மாதவி (35) மற்றும் இரு குழந்தைகளுடன் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜன.16 அன்று வெங்கட மாதவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் குரு மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: தில்லியில் அடர் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு!
சம்பவத்தன்று, வெங்கட மாதவி அவரது சொந்த ஊரான நந்தியலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து உண்டான வாக்குவாதத்தில் அவரை குரு மூர்த்தி அடித்து கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த கொலையின் ஆதாரங்களை கலைக்க, அவர்களது வீட்டு கழிப்பறையில் வைத்து மாதவியின் உடலை அவர் துண்டுத்துண்டாக வெட்டியதாகவும், பின்னர் அந்த பாகங்களை பிரஷெர் குக்கரில் வேக வைத்து அருகிலுள்ள ஏரியில் வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.