செய்திகள் :

இறுதிக்கட்டத்தில் மலர் தொடர்!

post image

மலர் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். 27 முதல் மலர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடர் அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு மலர் என்ற பாத்திரத்தை மையமாககொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மலர் தொடரின் பிரதான பாத்திரங்களில் அஸ்வதி, சுரேந்தர் ராஜும் நடித்து வருகின்றனர். முன்னதாக, மலர் பாத்திரத்தில் நடித்துவந்த பிரீத்தி ஷர்மா இத்தொடரில் இருந்து விலகியதால் அஸ்வதி நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: கவினின் கிஸ் படப்பிடிப்பு நிறைவு!

மேலும், இத்தொடரில் நிவிஷா, வருண், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 550-க்கு எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலர் தொடருக்கான வசனங்களை கார்த்திக் யுவராஜ் எழுத, ஜவஹர் இயக்கி வருகிறார். சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இத்தொடரை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், மலர் தொடரின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் மலர் தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் லக்கானி மத்திய பணிக்கு மாற்றம்!

சென்னை: வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ள... மேலும் பார்க்க

வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

புது தில்லி: தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை 'வன்முறையை விட கல்வியை' தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்... மேலும் பார்க்க

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருது!

திருச்சி: பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெ... மேலும் பார்க்க

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மணப்பாறை: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான் பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மணப்பாறைய... மேலும் பார்க்க

அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி

சென்னை: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அந்த 'மாசு'பட்டவர் யார் என்று நமக்கு இதுவரை தெரியவில்லையே? என்றவர், பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது என பாஜக ... மேலும் பார்க்க

தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!

புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை சுதந்திரமான மற்றும் நியாயமாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைந்துள்ளது. இந்த குழுவில் அஜய் மாக்க... மேலும் பார்க்க