ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
America: `ஓர் அரசாக அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம்...' - அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவதென்ன?
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து சிறு பதற்றமான சூழல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. புலம்பெயர்ந்தவர்கள், எல்லைப் பிரச்னை, மூன்றாம் பாலினம், பொருளாதார வரி விதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி வரி உயர்வு, ட்ரம்ப் சுவர் அமைத்தல், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது எனப் பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டவிரோத குடியேறிகளுக்கும் சிக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சட்டவிரோதமாக இங்கு குடியிருக்கும் மக்களில், இந்தியர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் திறந்திருக்கிறது. இந்தக் கருத்தில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமேயான நிலைப்பாடு அல்ல... ஒரு அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.
இந்தியத் திறமைகள் உலக அளவில் அதிகபட்ச வாய்ப்பைப் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதே நேரத்தில், சட்டவிரோத இடம்பெயர்வை உறுதியாக எதிர்க்கிறோம். சட்டவிரோதமான ஒன்று நடக்கும்போது, அதில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இணைகின்றன. இது விரும்பத்தக்கதல்ல. எனவே உலகின் அனைத்து நாட்டிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.