டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்
`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
எடப்பாடி சொல்லும் குற்றச்சாட்டு!
சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில், கலால் வரி, முத்திரைத்தாள் விற்பனை, ஜிஎஸ்டி வருவாய், வாகன வரி, பெட்ரோல், மதுபான விற்பனை மேலும் மத்திய அரசின் வரி பகிர்வு என அதிமுக ஆட்சியை விட 24,830 கோடி அதிகமாக மொத்தம் 1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. ஒருபக்கம் வருவாய் அதிகரித்திருக்கும் நிலையில் மறுபக்கம் மூலதன செலவும் இல்லை.
இருந்தபோதிலும் இதுவரை 3,53,392 கோடி ரூபாய்க் கடன் வாங்கியிருப்பது ஏன்... அப்படி கடன் வாங்கியும் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நிதி மேலாண்மை குழு அறிக்கை ஏதாவது கொடுத்ததா? அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை. இந்த ஆட்சி முடிவதற்குள் தமிழகத்தின் கடன் சுமை ஐந்து லட்சம் கோடியாக அதிகரிக்கும். அதுதான் திமுக அரசின் சாதனை. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என்ற சாதனையை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார்" என்று கடுமையாகப் பேசியிருந்தார்.
"மோசமான நிதிநிலைக்கு அதிமுகதான் கரணம்!"
எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். " 2011-ம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தமிழ்நாட்டின் கடன் சுமை வெறும் 1.05 லட்சம் கோடி மட்டுமே. அதே பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி முடியும் சமயத்தில் தமிழகத்தின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக அதிகரித்து வைத்திருந்தார்கள். பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் மொத்த அரசு இயந்திரத்தையும் நாசமாக்கி வைத்திருந்தார்கள். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் நாங்கள் தாக்கல் செய்த உபரி பட்ஜெட்டில் ஒரே ஒருமுறை தவிர்த்து மற்ற எந்த பட்ஜெட்டிலும் வருவாய் பற்றாக்குறை என்பதை இல்லாத நிலையில் அரசு நிர்வாகத்தை நடத்தியிருந்தோம்.
அதிமுக அரசு 2020-2021 நிதியாண்டில் தாக்கல் செய்த உபரி பட்ஜெட்டில் மட்டும் 1.70 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாகக் காட்டியிருந்தது. தமிழகத்தின் தற்போதைய மிக மோசமான நிதி நிலைக்கு முந்தைய அதிமுக ஆட்சிதான் காரணம். திமுக ஆட்சியின் தொழில் செய்ய ஏற்ற மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்கியிருக்கிறோம். மாநிலத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்திருக்கிறது. மகளிர் உரிமை தொகை, புதுமைப் பெண்கள் திட்டம் என எண்ணற்ற புதிய திட்டங்களைத் திராவிட மாடல் ஆட்சி கொண்டுவந்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுக்குக் கொடுக்கவேண்டிய நிதி பகிர்வில் பல திட்டங்களுக்குத் தமிழகத்தின் உரிய நிதியைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. எவ்வளவு சிக்கலான நிதி நெருக்கடியிலும் சீரிய அரசு நிர்வாகத்தால் எந்த திட்டத்தையும் நிறுத்தாமல், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஆட்சி நடந்துவருகிறது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும் அரசியல் செய்ய திமுக மீது வீண் பழியைச் சுமத்துகிறார் எதிர்க்கட்சி தலைவர்" என்கிறார்.
தமிழகத்தின் கடம் சுமை அதிகரிப்பது குறித்த உங்களின் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள் மக்களே..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs