ஜன. 31 முதல் 234 தொகுதிகளிலும் இபிஎஸ் சுற்றுப்பயணம்!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் நான்குமுனைப் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறியவுள்ளதாக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.
வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் இந்த சுற்றுப்பயணமானது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.