செய்திகள் :

Ranji Trophy : 'வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்' - இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்!

post image
நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்களும் இன்று ரஞ்சியில் களமிறங்கியிருக்கின்றனர். ஆனால், போட்டிகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு ஏமாற்றம் உண்டாகிவிட்டது. போட்டி ஆரம்பித்து வெறும் 20 நிமிடங்களுக்குள்ளாகவே ரோஹித், ஜெய்ஸ்வால், கில் என மூவரும் அவுட் ஆகியிருக்கின்றனர்.
Rohit Sharma

ரஞ்சியில் ஸ்டார்கள்..!

உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஷ், பார்டர் கவாஸ்கர் டிராபி தோல்வி இவற்றுக்கெல்லாம் பிறகு பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோருடன் தீவிரமாக கலந்து பேசிய பிறகு வீரர்களுக்கான 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருந்தது. அதன்படி வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் பயணிப்பதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மிக முக்கியமாக இந்திய அணிக்கு ஆடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதையும் உறுதி செய்ய வேண்டும். காயம் எதுவுமின்றி நலமாக இருக்கும்பட்சத்தில் தவிர்க்காமல் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆட முன் வந்தார். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மும்பை அணி ஆடும் ஆட்டம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும் ரோஹித்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா வழக்கமாக வெளிக்காட்டும் அட்டாக்கிங் ஆட்டத்தை இங்கே ஆட விரும்பவில்லை. நின்று நிதானமாக ஆடவே நினைத்தார். ஆனாலும் அவரால் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. உமர் என்கிற பௌலர் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை அரைகுறையாக லெக் சைடில் அடிக்க முயன்று டாப் எட்ஜ் வாங்கியிருந்தார்.

Rohit

19 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இதே மாதிரியே ஒரு ஷார்ட் பாலுக்கு ஒரு இன்னிங்ஸில் விக்கெட்டை விட்டிருப்பார்.

ஜெய்ஸ்வாலும் 4 ரன்களிலேயே அவுட் ஆகியிருந்தார். பஞ்சாப் vs கர்நாடகா போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் கில்லும் போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகியிருக்கிறார்.

இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் ரஞ்சிக்கு வருகிறார்கள் என்றவுடன் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. தங்களின் இழந்த பார்மை மீட்டெடுப்பார்கள் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், இங்கேயும் அவர்கள் சொதப்புவது ரசிகர்களை வேதனையடைய வைத்திருக்கிறது.

Arun Vijay : 'என் பசங்களும் மெடல் ஜெயிச்சு போடியம்ல ஏறணும்!' - தந்தையாக உருகிய அருண் விஜய்

டெல்லியில் நடந்த ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் குதிரையேற்ற போட்டியில் 18 பதக்கங்களை வென்று வந்த தமிழகத்தின் இளம் வீரர்களுக்கு சென்னை குதிரையேற்ற மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விரு... மேலும் பார்க்க

Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்யகுமார்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 தொடர் ஈடன் கார்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தியும் பேட்... மேலும் பார்க்க

Ind vs Eng : 'மேன் ஆப் தி மேட்ச் வருண்; வெளுத்தெடுத்த அபிஷேக்!' - இந்தியா எப்படி வென்றது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்றிருக்கிறது. போட்டி ... மேலும் பார்க்க

F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?

உலகப் புகழ் பெற்ற கார் பந்தயமாக F1 ரேசில் முதல் பெண் ரேஸ் இஞ்ஜினீயராக தேர்வாகியிருக்கிறார் லாரா முல்லர்.ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுக... மேலும் பார்க்க

Samantha: "சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு..." - சமந்தா நெகிழ்ச்சி

'World Pickle Ball' எனும் லீகில் ஒரு பிக்கிள் பால் டீமை நடிகை சமந்தா வாங்கியிருக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்க... மேலும் பார்க்க