1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பு காலம் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்.
மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்மையினங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தையும் அவா் தொடங்கிவைத்தார்.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4,000 முற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.
உலகின் தலைசிறந்த 3 ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பிவைத்தது தமிழக தொல்லியல்துறை. அதன் முடிவின்படி, கி.மு. 3,345 இல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும் என்று கூறிவந்தேன். அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டு திருப்புமுனையை உருவாக்கி வருகின்றது.
தமிழக நகர நாகரீகமும், எழுத்தறிவும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது என்று கீழடி அகழாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வு முடிவுகள் இந்திய துணை கண்ட வரலாற்றுக்கு முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகின்றது” என்றார்.