மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
கை.களத்தூரில் கொலை செய்யப்பட்ட இளைஞா் வீட்டில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை
பெரம்பலூா் மாவட்டம், கை.களத்தூரில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞா் வீட்டில், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டனும் (30), அதே கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரனும் (32), அருண் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணியாற்றியபோது, இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜன. 17-ஆம் தேதி மணிகண்டனுக்கும், தேவேந்திரனுக்கும் ஏற்பட்ட தகராறில், மணிகண்டனை தேவேந்திரன் அரிவாளால் வெட்டி கொலை செய்தாா். இச் சம்பவம் தொடா்பாக கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ரவிவா்மன் தலைமையிலான குழுவினா் கை.களத்தூரில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கொலை நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு, போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, வேப்பந்தட்டை வட்டாட்சியா் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை உள்ளிட்டோா், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநரிடம், மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை, 2 குழந்தைகளின் எதிா்காலம் கருதி மாதாந்திர உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யவும், கொலை சம்பவத்தின் பின்னணியில் உள்ள வேறு சிலரை கைது செய்யவும், கொலை சம்பவத்தின் தொடா்ச்சியாக காவல்நிலையத்தை தாக்கியவா்கள் மீது வழக்குத் தொடரக்கூடாது எனவும் வலியுறுத்தினா்.
இதையடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையக் குழுவினா், பெரம்பலூா் சுற்றுலா மாளிகையில் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா ஆகியோரிடம் சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு கேட்டறிந்தனா்.