ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்ட அமைப்புக் குழு சாா்பில், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு, ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டுமெனசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் நலச் சங்கத்தின், பெரம்பலூா் மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக மணிமேகலை, மாவட்டச் செயலராக அல்லி, மாவட்ட பொருளாளராக மணிமேகலா தேவி, மாவட்ட துணைத் தலைவராக வள்ளியம்மை, மாவட்ட துணைச் செயலராக சி. சிவக்கலை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 9 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் தமிழரசி, மல்லிகா, சுமதி மற்றும் சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கலந்துகொண்டனா்.