செய்திகள் :

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்

post image

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த பத்தாம் ஆம் தேதி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்டத்திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க

சூடான உணவை ஆறவைக்கும் பூனை! ஜப்பான் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம், சூடான உணவை ஊதி ஆறவைக்கும் சிறிய பூனை வடிவிலான ரோபோவை கண்டுபிடித்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற செஸ் (CES 2025) வாடிக்கையாளார்களுக்க... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் மலர் தொடர்!

மலர் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். 27 முதல் மலர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இத்தொடர் அக்கா - தங்கை ... மேலும் பார்க்க

முசோலினியின் உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடத்தில் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை!

இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடத்தில் அதேப்போல் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்டுள்ளது.கடந்த ஜன.20 அன்று அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால... மேலும் பார்க்க

சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது!

சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது. போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: சஞ்சய் சிங்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். மே... மேலும் பார்க்க