ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
புகையிலைப் பொருள்கள் விற்ற ஒருவா் கைது
இலுப்பூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்களை விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இலுப்பூா் அடுத்துள்ள மலைக்குடிபட்டி பகுதிகளில், குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்று வருவதாக சிறப்பு பரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
விராலிமலை செவகாட்டுப்பட்டியைச் சோ்ந்த சுருட்டையன் மகன் பழனிச்சாமி(29) அவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 3 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 13,400-ஐ பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவா் மீது வழக்கு பதிந்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.