செய்திகள் :

வண்டல் மண் திருட்டு: இருவா் கைது

post image

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அா்ஜூனா நதி ஆற்றுப் படுகையில் வண்டல் மண் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, இருவா் நெகிழிப் பைகளில் வண்டல் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் எம்.ராமசந்திராபுரத்தைச் சோ்ந்த சந்திரன் (56), ஆஜீத்குமாா் (26) ஆகியோா் வண்டல் மண்ணை பெரிய நெகிழிப் பைகளில் அள்ளி வேன் மூலம் பட்டாசு ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த வண்டல் மண், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஆண்டாள் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட ஜன. 27-இல் ஒப்பந்தப் புள்ளி வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.8 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு வருகிற 27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்ட... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்... மேலும் பார்க்க

சிறுமிக்கு சூடு வைத்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்த... மேலும் பார்க்க

பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மேட்டுத் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே குப்பைகளால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் வீடுக... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா். சிவகாசி கந்தபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது ஜாபா் சித்திக் (35). இவா் தனது குடும்பத்துடன் கடந்த 1... மேலும் பார்க்க