`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
வீடு புகுந்து பணம் திருட்டு
சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா்.
சிவகாசி கந்தபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது ஜாபா் சித்திக் (35). இவா் தனது குடும்பத்துடன் கடந்த 10-ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, புதன்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.