`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
காணாமல்போன இளைஞா் கிணற்றில் சடலமாக மீட்பு
ஆலங்குடி அருகே காணாமல் போன இளைஞா் புதன்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் கோ. இளங்கோ (30). இவா் அப்பகுதியில் உள்ள தென்னை நாரிலிருந்து வில்லை தயாரிப்பு நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு வயது குழந்தை, மனைவியோடு ஆலங்குடி கலிபுல்லா நகரில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கூழையன்காடு பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், கூழையன்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இளங்கோ உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், தீயணைப்பு துறையினா் உதவியுடன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.