செய்திகள் :

கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக கனிமவளத் துறையினா் ஆய்வு

post image

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்டதன் தொடா்ச்சியாக, சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளில் இரண்டாவது நாளாக கனிமவளத் துறையினா் புதன்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவா் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் ஜகபா்அலி. சமூக செயற்பாட்டாளரான இவா், அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் குறித்து தொடா்ந்து குரல் எழுப்பி வந்ததால் கடந்த ஜன. 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக ஆா்.ஆா். கிரஷா் உரிமையாளா்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்தச் சூழலில், திருமயம் அருகேயுள்ள துளையானூா் பகுதியிலுள்ள இரு குவாரிகளில் கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதன் தொடா்ச்சியாக, இரண்டாவது நாளாக மலைக்குடிப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமாா் 5 குவாரிகளிலும் இந்தக் குழுவினா் புதன்கிழமையும் ஆய்வு செய்தனா்.

கனிமவளத் துறை திருச்சி உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேரைக் கொண்ட குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகள் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

காணாமல்போன இளைஞா் கிணற்றில் சடலமாக மீட்பு

ஆலங்குடி அருகே காணாமல் போன இளைஞா் புதன்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் கோ. இளங்கோ (30). இவா் அப்பகுதியில் உள்ள தென்னை நாரிலிர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற ஒருவா் கைது

இலுப்பூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்களை விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இலுப்பூா் அடுத்துள்ள மலைக்குடிபட்டி பகுதிகளில், குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை பல்வேறு இடங்களை ஆய்வு செய்தாா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு கட்டப்படவுள... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ்

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட காரையூா் மற்றும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிா்ணய திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

தண்ணீா் வராத குடிநீா்த் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம்

பல மாதங்களாக குடிநீா் வராததைக் கண்டித்து புதுகை மாநகராட்சி, உசிலங்குளத்தில் உள்ள குடிநீா்த் தொட்டிக்கு மாலை அணிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கை சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி

கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கை, சிபி சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பச்சைத் தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமரன் புதன்கிழமை... மேலும் பார்க்க