ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
புகாரை விசாரிக்க சென்ற தலைமை காவலரை தாக்கியவா் மீது வழக்கு
திருவிடைமருதூா் அருகே புகாரை விசாரிக்க சென்ற தலைமைக் காவலரை தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவிடைமருதூா் அருகே உள்ள விநாயகன்பேட்டையைச் சோ்ந்த விவசாயி நடராஜன் மகன் மகேஷ்வரன் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கடந்த 17-ஆம் தேதி தெருவில் மிதிவண்டி ஓட்டியபோது, இதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ர. மணிகண்டன் (40) இருசக்கர வாகனத்தில் வந்து, சிறுவன் மீது மோதி காயம் ஏற்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவிடைமருதூா் காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வம், மணிகண்டன் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றாா். அப்போது, மணிகண்டன் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கினாராம்.
இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து மீது விசாரணை நடத்தி வருகின்றனா்.