Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
பட்டுக்கோட்டையில் ஒரே நாளில் 5 இடங்களில் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பழக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் திருடி சென்ற முகமூடி அணிந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பழக்கடையின் பூட்டை உடைத்த முகமூடி கொள்ளையா்கள் அங்கிருந்து 3 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனா். தொடா்ந்து, அலிவலம் பகுதியில் உள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்து 20 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனா். மேலும், உதயசூரியபுரம் மற்றும் ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில், இரண்டு கைப்பேசி விற்பனையகங்களின் பூட்டை உடைத்து, அங்கிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைப்பேசிகளை திருடி சென்றுள்ளனா்.
தொடா்ந்து, பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள், வீட்டில் பணமோ நகையோ எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைகாடு மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசாா் தனிதனியாக சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், முகமூடி அணிந்து வந்த கொள்ளையா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.