தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
துருக்கி ஹோட்டல் தீவிபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு
அங்காரா: துருக்கி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களிந் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.
அந்த நாட்டின் போலு மாகாணத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற பனிச் சறுக்கு சுற்றுலா மையமான காா்டால்கயா நகரில் அமைந்துள்ள 12 அடுக்கு மாடி ஹோட்டலில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் 66 போ் உயிரிழந்ததாகவும் 51 போ் காயமடைந்ததாகவும் முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை கூறினா்.
குளிா்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த ஹோட்டலில் ஏராளமானவா்கள் தங்கியிருந்தனா். அப்போது தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆறு போ் அடங்கிய குழுவை துருக்கி அரசு நியமித்துள்ளது.