செய்திகள் :

‘இஸ்ரேல் கட்டுப்பாட்டில் தான் ராஃபா எல்லை இருக்கும்’

post image

ஜெருசலேம்: காஸா போா் நிறுத்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லை தங்கள் கட்டுப்பாட்டில்தான் தொடா்ந்து இருக்கும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் நிறுத்தத்தின் முதல்கட்ட அமலாக்கத்தின்போது, காஸா-ராஃபா எல்லையை பாலஸ்தீன அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவாா்கள் என்று வெளியாகும் தகவல் தவறானது.

அந்தப் பகுதி தொடா்ந்து இஸ்ரேல் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஹமாஸ் அமைப்புடன் தொடா்பில்லாத பாலஸ்தீன அதிகாரிகள் மட்டும் அங்கு இருந்து, கடவுச் சீட்டில் முத்திரை இடுதல் போன்ற சிறு பணிகளை மேற்கொள்வா். காஸாவில் இருப்பவா்கள் அங்கிருந்து வெளியேறவும், பிற நாடுகளுக்குச் செல்லவும் அந்த எல்லை மட்டுமே ஒரே வழியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போா், இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்தத்துக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக, தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, மூன்று பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, மேலும் நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் 25-ஆம் தேதி விடுவிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், எகிப்தையும் காஸாவையும் இணைக்கும் ராஃபா எல்லையின் கட்டுப்பாடு பாலஸ்தீன அதிகாரிகளிடம் அளிக்கப்படும் என்ற தகவலை இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு

நியூயாா்க்: அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்..ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.அப்போது அமெரிக்காவில் இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேற... மேலும் பார்க்க

மேலும் ஓா் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடா்ந்திருந்த மேலும் ஒரு வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி கலீதா ஜியாவி... மேலும் பார்க்க

குடியுரிமை கட்டுப்பாடு: இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிா்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என்ற அதிபா் டிரம்ப்பின் உத்தரவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக எம்... மேலும் பார்க்க

துருக்கி ஹோட்டல் தீவிபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

அங்காரா: துருக்கி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களிந் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.அந்த நாட்டின் போலு மாகாணத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற பனிச் சறுக்கு சுற்றுலா மைய... மேலும் பார்க்க

பிறப்புரிமைக் குடியுரிமை ரத்து முடிவுக்கு எதிராக 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!

அமெரிக்காவில் வெளிநாட்டவருக்குப் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர... மேலும் பார்க்க

திறமையானவர்கள் அமெரிக்கா வருவது பிடிக்கும்! எச்-1பி விசா குறித்து டிரம்ப்!

திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வருவதை தான் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அத... மேலும் பார்க்க