எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கரூர்: முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்; கொல்ல திட்டம் போட்ட இளைஞர்; முறியடித்த போலீஸ்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 24) என்பவரும் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்குமிடையே காதல் வளர்ந்த நிலையில், கடந்த இரு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதனால், இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவசங்கரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரிடம் பழகுவதைத் தவிர்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே, கரூர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அஜித் (வயது 22) என்ற இளைஞரைக் காதலித்து வந்த அந்த இளம்பெண், கடந்த 13ஆம் தேதி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த சிவசங்கர் ஆத்திரத்தில், அந்த பெண்ணைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார். மேலும், அந்த இளம்பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியொன்றில் தங்கியுள்ளார்.
அவருடன், கூலிப்படை ஆளான மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 38) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், நாராயணன் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 20) ஆகிய இருவரும் உடனிருந்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராமலிங்கத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக, அந்த தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சிவசங்கர், ஆனந்த், ஹரிஹரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தனது முன்னாள் காதலியையும், அவரது கணவரையும் கூலிப்படை வைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY