Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சினிமாவில் பிஸியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் 'சாவா' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் காயத்தையும் பொருட்படுத்தாமல் விமானத்தில் பயணித்து மும்பை செல்ல திட்டமிட்டிருக்கிறார்.
அப்போது விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை வீல் சேரில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா விரைவில் குணமடைய வேண்டும் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...