செய்திகள் :

Adani: ``பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்" - மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி

post image
உலகின் மிக முக்கிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது மகன் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடைபேற இருக்கிறது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

adhani family
adhani family

அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்வையிட்ட கௌதம் அதானி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியப்போது, " எனது மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எங்கள் வீட்டு நிகழ்ச்சி சாதாரண மக்கள் வீடுகளில் நடைபெறுவது போலவே இருக்கும். நான் கங்கை அன்னையின் ஆசிர்வாதத்தைப் பெற இங்கு வந்தேன். ஜீத்தின் திருமணம் மிகவும் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும், அது எளிமையான முறையிலும் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

adhani family
adhani family

ஜீத் அதானியின் திருமணம் பிரபலங்கள் முன்னிலையில் நட்சத்திரங்கள் நிறைந்த திருமணமாக இருக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்த கௌதம் அதானி, "அது அப்படி இருக்காது." என்று கூறியிருக்கிறார்.

Saif Ali Khan: டிஸ்சார்ஜ் ஆன சைஃப் அலிகான்; வீட்டில் குவிந்த ரசிகர்கள்; மருத்துவர்கள் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் திருட வந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார். சைஃப் அலிகான் அந்த நபரை... மேலும் பார்க்க

4 வருடங்களில் 168% லாபம்: ரூ.31 கோடிக்கு வாங்கிய வீட்டை, 83 கோடிக்கு விற்பனை செய்த அமிதாப் பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே அலுவலகம், குடியிருப்பு கட்டடங்களில் முதலீடு செய்து வரும் அமிதாப் பச்சன் மும்பையில் அவற்றை வாட... மேலும் பார்க்க

Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - கரீனா கபூர் வேதனை

மும்பையில் நேற்று (ஜனவரி 16) அதிகாலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதிகாலை நேரத்தில் மர்ம நபர் திருட வந்தாரா அல்லது வேறு ஏதாவ... மேலும் பார்க்க

Kangana Ranaut: ``பாலிவுட்டை ஆளும் 3 கான்களை வைத்து இயக்க தயார்'' - கங்கனா ரனாவத்

எப்போதும் சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற நடிகை கங்கனா ரனாவத் புதிதாக எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் கங்கனா மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார். ... மேலும் பார்க்க

`மகனின் படம் ஹிட்டானால் புகைப்பிடிப்பதை கைவிட்டு விடுவேன்’ - சபதம் செய்துள்ள நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகன் ஜுனைட் கான் புதிதாக லவ்யபா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஹூரோயினாக நடித்துள்ளார். இது குஷி கபூருக்கு பெரிய... மேலும் பார்க்க

``வாங்க `எமெர்ஜென்சி' திரைப்படம் பார்க்கலாம்!'' - பிரியங்கா காந்தியிடம் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்

இந்தியாவில் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தபடுத்தபட்ட எமெர்ஜென்சியை கதைக் கருவாக வைத்து, `எமெர்ஜென்சி' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமா... மேலும் பார்க்க