எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஈரோடு கிழக்கு: தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்; பணியில் கவனக்குறைவா? பின்னணி என்ன?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் 17ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. 20ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 8 பேர் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து, மொத்தம் 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரான மனீஷ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பின்னர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது எப்படி எனத் தர்மபுரியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்த நிலையில் சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ள நிலையில் பத்மாவதியின் வேட்புமனு எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கவும் முடிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடக மாநில வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனுவை ரத்து செய்வதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரான மனீஷ் அறிவித்து, 46 வேட்பாளர்கள் கொண்ட சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டார்.
சர்ச்சைக்குள்ளான இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரான மனீஷ் பணியில் கவனக் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்பதால், அவரைத் தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பிலிருந்து விடுவித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY