செய்திகள் :

Seeman: `தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்..!' - திருமுருகன் காந்தி காட்டம்

post image
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம், பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று (ஜன22) முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

சீமான்

இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது

இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "பெரியார் குறித்து அவதூறாக பத்திரிகையாளர் முன்புதான் பேசினார். அப்போது, அவர்கள் முன்பே பெரியார் தொடர்பான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. டயலாக் பேசுவதற்கு மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு. ஆனால் மன்னிப்பு கேட்பது மட்டும் நீதிமன்றத்தில். பொது வெளியில் கேட்டால் சீமான் பதில் சொல்லமாட்டாரா?

பதில் சொன்னால் என்ன பிரச்னை ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும். அது என்ன ரகசிய ஆவணமா. ரகசியமாக சீமானே தயாரித்து வைத்திருக்கிறாரா. நீங்கள்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறீர்கள். அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடுங்கள்.

திருமுருகன் காந்தி

பெரியார் குறித்த அவதூறுக்கான எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அந்தப் புத்தகத்தை படித்துள்ளோம். சீமான் கூறும் ஆதாரம் எல்லாம் பாஜகவினர் எழுதிய புத்தகம். சீமானுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்களுக்கு எல்லாம் இதைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில்

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.இந்தப் பேச்சு பெரியார... மேலும் பார்க்க

`எங்களை உட்காரச் சொல்லுங்கள்' - கவனிக்க மறந்த கதைகள்; கள ஆய்வு ரிப்போர்ட்

குடும்ப கஷ்டத்துக்காக நின்னுட்டிருக்கோம்:"காலையில எட்டு மணிக்கு வேலைக்கு வர்றோம். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்கு நைட்டு பத்து மணிக்கு மேல ஆயிடும். குறைந்தபட்சமா பார்த்தாலும் ஒரு நாளைக்கு 10 மணி ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்; பணியில் கவனக்குறைவா? பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் 17ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. 20ஆம் தேதி வேட்புமனு திரும்பப்... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு; நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் நீர்வழிப்பாதை அருகே பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த பத்து வருடங்களுக்கு... மேலும் பார்க்க

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்த பாதுகாப்பு படை!

தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசுத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய நபர் உட்பட 14 மாவோயிஸ்டுகளை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்கவுன்டரில் கொலைசெய்திருக்கின்றனர்.முன்... மேலும் பார்க்க

`4,500 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்!'- பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்; சிக்கிய பெண் வி.ஏ.ஓ

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம... மேலும் பார்க்க