செய்திகள் :

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை..! சஹால் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!

post image

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தனது 96ஆவது விக்கெட்டினை வீழ்த்தினார்.

இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

முதல் ஓவரில் 3ஆவது பந்திலேயே பிலிப் சால்ட் டக் அவுட்டானார். அடுத்ததாக 2.5ஆவது ஓவரில் பென் டக்கட்டை ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டின் மூலம் அர்ஷ்தீப் சிங் 97ஆவது விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் முன்னேறியுள்ளார்.

இதற்கு முன்னதாக முதலிடத்தில் சஹால் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளுடன் இருந்தார்.

61 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி20யில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள்

1. அர்ஷ்தீப் சிங் - 97

2. யுஸ்வேந்திர சஹால் - 96

3. புவனேஷ்வர் குமார் - 90

4. ஜஸ்பிரீத் பும்ரா - 89

5. ஹார்திக் பாண்டியா -89

முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டுத் திடலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து டாப் ஆர்டர் ப... மேலும் பார்க்க

தனியாளாக போராடிய பட்லர்..! இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு!

முதல் டி20யில் வெற்றிபெற இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் வெல்வோம் எனக் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்க... மேலும் பார்க்க

முதல் டி20: இந்திய அணி பந்துவீச்சு!

இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக... மேலும் பார்க்க

பிபிஎல்: நாக்-அவுட் சுற்றில் வார்னர் அணி வெற்றி, ஸ்டாய்னிஸ் அணி வெளியேற்றம்!

பிபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றில் இருந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெளியேறியது. பிபிஎல் டி20 லீக் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதல் ... மேலும் பார்க்க

மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஏபிடி வில்லியர்ஸ்! ஆர்சிபியில் விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்... மேலும் பார்க்க