செய்திகள் :

தெலுங்கில் வெளியாகும் மதகஜராஜா..!

post image

விஷாலின் மதகஜராஜா தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மதகஜராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது. அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பொருளாதர பிரச்னைகளால் அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

பின்னர், பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஜன.12-ல் வெளியானது.

இந்தத் திரைப்படம் வெளியான 9 நாள்களில் உலகளவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷாலுக்கு இந்த வெற்றி மிகவும் நெகிழ்ச்சியைக் கொடுத்தது. சுந்தர் சி பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் “எனது மருந்து” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் வரும் ஜன.31ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்ய கிருஷ்ணன் புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது.

அனுபமாவின் பரதா டீசர் வெளியீடு!

தெலுங்கு படம் சினிமா பன்டி மூலம் பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீத... மேலும் பார்க்க

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் - பாடல் வெளியீடு!

நடிகர் யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் கும்பா கும்பா பாடல் இன்று வெளியானது. மானஸி பாடியுள்ள இந்தப் பாடலை, படத்தின் மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவே எழுதியுள்ளார்.சகுனி படத்தை இயக்கி... மேலும் பார்க்க

ஏமாற்றி வென்றாரா ஜோகோவிச்? மீண்டும் வலுக்கும் சர்ச்சைகள்!

ஆஸி. ஓபன் காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச் ஏமாற்றியதாக புகார் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னணி போட்டியாளரான ஸ்பெயினின் காா்லோஸ் அல... மேலும் பார்க்க

டோமினிக் கதையைக் கேட்டதும் மம்மூட்டி உடனடியாக ஒப்புக்கொண்டார்: கௌதம் மேனன்

நடிகர் மம்மூட்டி டோமினிக் கதையைக் கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ த... மேலும் பார்க்க

2கே லவ் ஸ்டோரி டிரைலர்!

சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’... மேலும் பார்க்க

மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக பிரபல நடிகை!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். மாரி தொடரிலிருந்து ஆஷிகா வெளியேறுவது அத்தொடருக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அவருக... மேலும் பார்க்க