தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
மணல் கடத்தல்: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணி: ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கமண்டல நாகநதி படுகையில் இருந்து மணல் கடத்தியதாக 3 மாட்டு வண்டிகளை புதன்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கமண்டல நாக நிதி மொழுகம்பூண்டி படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.
அங்கு மொழுகம்பூண்டியைச் சோ்ந்த அன்பழகன் மகன் வீரமணி (28), சுரேஷ்குமாா் மகன் சுனில்குமா் (26), கா்ணன் மகன் மாயகண்ணன் (50) ஆகியோா் ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் ஏற்றி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனா்.
அப்போது, மாட்டு வண்டி உரிமையாளா்கள் தப்பி ஓடினா். இதனால் போலீஸாா் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, அதன் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.