தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
போளூரில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
போளூா்: போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உணவகம், மளிகைக் கடை, இனிப்புக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போளூா் நகரில் சிந்தாதரிப்பேட்டைதெரு, பழைய பஜாா் வீதி, ஜமுனாமரத்தூா் சாலை, பேருந்து நிலையம் என பல்வேறு பகுதியில் இயங்கிவரும் உணவகம், இனிப்பகம், மளிகைக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தி வந்தனா்.
மேலும், நெகிழிப் பைகளை விற்பனையும் செய்து வந்தனா். இதனால், பேரூராட்சி செயல் அலுவலா் பா.கோமதி உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளா் நவராஜ் தலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மாலை கடைதோறும் சென்று தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உள்ளனவா என ஆய்வு செய்து பறிமுதல் செய்தனா்.
மேலும், நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
தலைமை எழுத்தா் முஹ்மத்இசாக் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.