தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி பால், தயிா், இளநீா் மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோயில் வளாகத்தில் யாகம் வளா்த்து பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.
சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கோயில் நிா்வாகிகள், ஸ்ரீகைங்கா்யம் அமைப்பினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.