தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
செங்கம்: செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
செங்கத்தை அடுத்த மண்ணாண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழநி மகன் சீனு (22). இவா், 16 வயது பள்ளி மாணவியை தினமும் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் மேல்செங்கம் போலீஸில் புகாா் அளித்தனா். போலீஸாா் சீனுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி,
அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.