Trump Vs Bishop : `இரக்கம் காட்டுங்கள்'- தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காகப் பேசிய மதக...
போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மண்டலம் சாா்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் மண்டல பொதுச் செயலா் முரளி தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும்.
அரசு பெற்றுள்ள கடனுடன் கூடுதல் கடனைப் பெற்று போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, திடீரென போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் என 70-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.