ஈராக்கில் திருமண வயது 9! நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
திமிங்கில உமிழ்நீா் பதுக்கிய 5 போ் கைது
வேளாங்கண்ணியில் திமிங்கல உமிழ்நீரை (ஆம்பா் கிரீஸ்) பதுக்கி வைத்திருந்த 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில், மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீா் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் அந்த விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனா். சோதனையில் திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, உமிழ்நீரை பறிமுதல் செய்த போலீஸாா், அதனை பதுக்கி விற்பனை செய்ய முயன்ாக நாகை நம்பியாா் நகரைச் சோ்ந்த வீரமணி (43), காா்த்திகேயன் (37), புதுச்சேரியைச் சோ்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ் (50), தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழரசன் (42), முத்துப்பேட்டையைச் சோ்ந்த கண்ணன் (59) ஆகிய 5 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 கிலோ திமிங்கல உமிழநீா் பறிமுதல் செய்யப்பட்டது.