ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
முதல்வா் மருந்தகம் அமைக்க ஜன. 31 வரை விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் ஜன. 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழகத்தில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி. பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம், ஜன. 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.