1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
வல்லான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!
சிந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள்.
விஆர் மணி செய்யோன் எழுதி இயக்கியுள்ள வல்லான் படத்தினை விஆர் மணிகண்டன், வி. காயத்ரி இணைந்து தயாரித்துள்ளார்கள்.
சமீபத்தில் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வல்லான் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ள வல்லான் படம் வரும் ஜன.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகராக சுந்தர். சி கடைசியாக அரண்மனை 4இல் நடித்திருந்தார். மேலும் 2 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.