செய்திகள் :

லிபியா போர் குற்றவாளி விடுதலை..இத்தாலி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு!

post image

போர்குற்றவாளியாக கருதப்படும் லிபியாவை சேர்ந்த நபரை விடுதலை செய்ததற்கு பதிலளிக்குமாறு இத்தாலி நாட்டு அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.

லிபியா நாட்டைச் சேர்ந்த போர்குற்றவாளியான ஒசாமா அல்மஸீரி நஜீம், குறித்து ஐசிசியின் நெதர்லாந்து பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.19 அன்று இத்தாலி நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், கடந்த ஜன.21 அன்று அவரை இத்தாலி விடுதலை செய்தது. பின்னர் அவர் அரசின் விமானம் மூலமாக லிபியா தலைநகர் திரிப்பொலி நகரத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

லிபியாவின் சிறப்பு பாதுகாப்புப் படையின் அதிகாரிகாயாக செயல்பட்ட நஜீம் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திரிப்பொலியிலுள்ள மிட்டிகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவாசிகளை கொலை செய்தததற்காகவும், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மனித சமூகத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்ததற்காகவும் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காகவும் அவருக்கு எதிராக ஐசிசி பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், இத்தாலியில் கைது செய்யப்பட்ட நஜீம் தற்போது விடுதலை செய்யப்பட்டது குறித்து இத்தாலி நாட்டு அரசு விளக்கமளிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலீஸில் மீண்டும் காட்டுத் தீ: 31,000 பேர் வெளியேற்றம்

ஆனால், இந்த விடுதலை குறித்து இத்தாலி நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஐசிசி உடனான அனைத்து உறவுகளையும் நீதி அமைச்சகம் கையாள்வதால், நீதித்துறை அமைச்சர் கார்லோ நோர்டியோவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் நஜீமின் கைது முறையானதாக இல்லாததினால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, திரிப்பொலியில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட லிபியாவின் அரசாங்கத்துடன் இத்தாலிய அரசாங்கம் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவரது விடுதலை லிபியாவின் அழுத்ததாலோ அல்லது அந்நாட்டினுடன் கொண்ட உறவினாலோ அல்ல என்று இத்தாலி நாட்டு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந... மேலும் பார்க்க

இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்த நிலையில், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி என்று நிதியமைச்சர் தங்கம்... மேலும் பார்க்க

கோமியம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கோமியத்தில் உள்ள சேர்மங்கள் மற்றும் புரதம் பலருக்கு ஒவ்வாமையை உருவாக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.பொங்கல் விழாவையொட்டி சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குந... மேலும் பார்க்க

தில்லியில் 19 வயது இளைஞர் குத்திக்கொலை! 2 பேர் கைது!

புது தில்லியில் 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த லக்கி (வயது 19), நேற்று (ஜன.22) மாலை உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ... மேலும் பார்க்க

ஓடிடியில் புஷ்பா -2 எப்போது?

புஷ்பா - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 .இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ... மேலும் பார்க்க

தாய்லாந்தின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.தாய்லாந்தைச் சேர்ந்த சோம்லக் கம்சிங் (வயது ... மேலும் பார்க்க