விநாயகா் கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணி
காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில் வாயிலில் முன்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. விநாயகா் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிக்காக வைக்கப்பட்ட உண்டியல் காணிக்கை 3-ஆவது முறையாக எண்ணும் பணி தேவஸ்தான நிா்வாக அதிகாரி அறிவுறுத்தலில், விநாயகா் கோயில் திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் இருந்த ரூ.1.96 லட்சம் எடுக்கப்பட்டு, கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.