தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ஆம்பூா்: குடியாத்தம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தாா். அங்குள்ள அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் சத்யானந்தம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஒன்றிய குழு உறுப்பினா் ஆனந்தி நித்தியானந்தம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.